top of page
Search

வீதிவகுப்பறை


சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி.



பள்ளிகளுக்குப் போக முடியாமல் குழந்தைகள் இருக்கும் சூழலில் மலைப்பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது வீதி வகுப்பறைகள் . ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் கூடும் குழந்தைகளை ஒருங்கிணைத்து அடிப்படை கல்வியையும் வாசிப்பையும் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். கல்லூரி படிக்கும் மாணவ மாணவியர், எழுதப் படிக்கத் தெரிந்த பெண்கள் & ஆண்கள் தன்னார்வலர்களாக 20 பேர் தன்னை இணைத்துக் கொண்டு 20 வீதி வகுப்பறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். சுடர் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த தன்னார்வலர்களுக்கு வாசிப்பை கொண்டு சேர்ப்பது குறித்த ஓர் பயிற்சியளிக்க அழைத்திருந்தார்கள். ஓர் உரையாடலாய் , கதையாய், விளையாட்டாய் பலவித கற்றலோடு நிகழ்வு நிறைந்தது. செங்குந்தர் பள்ளி தாளாளர் சிவானந்தம் ஐயா இணைந்து எங்களை மேலும் ஊக்கப்படுத்தினார். பவளக்குட்டை ஆசிரியர் சித்ரா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாலையில் கிடைத்த சிறு பொழுதில் அழகான மலைகலை சுற்றி சுற்றி ஓர் வீதிவகுப்பறை ஒன்றுக்குச் சென்றோம். இசைக்கலைஞர் ஒலிப்பொளியாளர் மணிகண்டன் இசையொன்றை இசைக்க நானும் குழந்தைகளும் பாட அவ்விடம் பெருமகிழ்ச்சி கரைபுரண்டோடியது. குழந்தைகளுக்கு தேவையான நூல்களை நண்பர் விழியன் தன் நண்பர்களோடு சேர்த்து அனுப்பியிருந்தார். அப்புத்தகங்கள் தேடி அடைந்தது தன் வாசகர்களை.







Recent Posts

See All
bottom of page