
கதைக்கள நிகழ்வொன்றில் குழந்தைகளுக்குக் கதை சொல்ல வைத்தோம். அப்போது தேனீக்களைப் பற்றிய அந்தக் கதை முடிந்ததும் குழந்தைகள் கேட்ட சில கேள்விகள் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.
ஒரு குழந்தை கேட்ட கேள்வி...
'தேனீக்கள்... பூக்களில் தேன் எடுத்து விட்டுப் பறக்கையில் ஏன் அந்தப் பூக்களில் மகரந்தத்தின் நிறம் மாறுகிறது?' என்பது ஒரு முக்கியமான கேள்வி.
இந்தக் கேள்விக்கான பதிலை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்.
- - - - - - - - - - - - - - - -
அடுத்ததாக இன்னொரு குழந்தை கேட்டது.
'தேன்கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீ தானே இருக்கும்... ஒருவேளை அந்தத் தேன்கூட்டுக்கு இன்னொரு ராணித்தேனீயும் வந்து விட்டால் அப்போது முன்பே இருக்கக் கூடிய ராணித்தேனீ என்ன செய்யும்?' அந்தக்குழந்தையின் கேள்வி...
குழந்தைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று எங்களை அசர வைத்தது.
அந்தக் குழந்தையின் கேள்விக்கான பதிலை நாங்கள் தேடிக் கண்டுபிடித்து சொன்னோம். 'முன்னதாக இருக்கும் ராணித்தேனீ புதிதாக வந்த ராணித்தேனீயை கொன்று விடும் அல்லது தேவைக்காக வேறொரு கூட்டை உருவாக்கும் என்று'.
குழந்தைகள் உலகம் எப்போதுமே கேள்விகளால் நிரம்பியது. அந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தரக்கூடிய விதத்திலும், குழந்தைகளின் கற்பனையைத் தூண்டக்கூடிய விதத்திலும் நமது கதை சொல்லல் இருந்து விட்டால் நிச்சயம் நம்மால் ஆரோக்யமான சிந்தனையை குழந்தைகளுக்குள் வளர்த்தெடுக்க முடியும்.
எனவே பெற்றோர் தினமும் தங்களது குழந்தைகளுக்கு கதை சொல்வதை பழக்கப்படுத்திக் கொள்வதோடு அவர்களைக் கதை சொல்லுமாறு தூண்டவும் வேண்டும்.
コメント