6 மாநிலங்கள் - போக வர 4000 கி. மீ ஐந்து நாட்கள் பகல் பயணம். இந்தியாவின் பாதத்திலிருந்து இதயம் நோக்கிய இனிய பயணம்.
நான், அருள், நிஷாந் & மகிழ் கூடவே இளையாராஜா
ஏர். ஆர். ரகுமான் மற்றும் சில இசைகளும் பாடல்களுமாய். 2019 ஜனவரின் ஓர் குளிர் நாளில் துவங்கிய பயணம் முழுதும் நம் நாட்டின் பன்முக கலாச்சாரத்தை தரிசிக்க முடிந்தது. வீடுகள், விவசாயம், போக்குவரத்து, மக்கள், கால்நடைகள், ஆறுகள் ஒவ்வொன்றும் மனதை தென்றலாய் தீண்டின.
மொத்தப் பயணத்தில் ஆறு மாநிலங்கள்
தமிழ்நாடு
கர்நாடகா
தெலுங்கானா
ஆந்திரா
மஹாராஷ்டிரா
மத்தியபிரதேசம் என சுற்றித்திரிந்த சுற்றுப்பயணம். வாழ்வை உயிர்பிக்கும் நொடிகள் பயணங்களால் ஆனவை என மனதார நம்புகிறோம் நானும் அருளும். நால்வரும் இந்த பயணத்தில் மகிழ்ச்சி, ஆனந்தம், நிறைவு , நிம்மதி , ஏகாந்தம் , பயம், கோவம் , திகில் என கலந்த கதம்ப உணர்வில் இணைந்திருந்தோம். மஹாராஷ்டிராவின் நெடுஞ்சாலையில் காரை நான் ஓட்டினேன் என்பது என் டைரியில் நான் எழுதிக் கொண்ட மைல்கல். பயணங்களுக்கு எப்போதுமே ஆர்வமாய் காத்திருக்கிறோம். மொபைலில் எடுத்து சில படங்களை இணைக்கிறேன். பார்த்து இன்புற்று குடும்பத்தோடு ஓர் பயணதிட்டத்தை உடனே தயாராக்குங்கள் அது 200 கி.மீ ஆயினும் சரி 2000 கி.மீ. ஆயினும் சரி. வாழ்த்துகளும் அன்பும்.
-சி.வனிதாமணி அருள்வேல்
கதைக்களம் - ஈரோடு
Comments