
Our Events and Activities
Events:

குழந்தைகள் உலகம் (விளையாட்டும் கலைகளும்)
"விளையாடலாமா?" "கதை கேட்கலாமா?" என்ற சொற்கள் போதும். நொடிப் பொழுதில் குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டுவிடலாம். விளையாட்டும் கதைகளும் குழந்தைகளிடம் மிகவும் நெருக்கமானவை. விளையாட்டையும் கதை சொல்வதையும் தங்களது பயணங்களாக ஏற்றுக்கொண்ட இனியன் மற்றும் வனிதாமணி அருள்வேல் அவர்கள் இந்தப் புத்தகத்தில் மிகவும் விரிவாக உரையாடுகிறார்கள்.

சாய்கிருபா சிறப்பு குழந்தைகள் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி
சவால்கள் நம்முன் வரும்போது இரு முடிவுகள் நமக்கு தோன்றும், ஒன்று பின்வாங்குவது இரண்டாவது முன்னோக்கி சென்று முழு உழைப்பையும் போட்டு முயன்று பார்ப்பது. சாய்கிருபா சிறப்பு குழந்தைகள் பள்ளி தாளாளரும் என் அன்புத் தோழியுமான கவின் அழைத்து எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி எடுத்த தரமுடியுமா? எனக்கேட்ட போது நான் இரண்டாம் முடிவை எடுத்து முயற்சியிலும் பயிற்சியிலும் சிறப்பு குழந்தைகளைப் பற்றிய சரியான புரிதல் ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் உடல் & மனம் ,மூளை செயல்திறன் என்பது குறித்தான விசயங்களை அறிந்து கொண்டேன்.
