
2019 ல் இதே நாளில் நூல்தளம் சிறார் புத்தக விற்பனை நிலையம் துவங்கப்பட்டது. கதைக்களத்தின் துணை நிறுவனமாக வீட்டிலேயே நூல்தளம் துவங்கப்பட்டது. இரண்டு வருடங்களில் முதல் வருடம் சில பதிப்பகங்களில் புத்தகங்களை வாங்கி நேரடியாக வீட்டுக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்பவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தேன். மேலும் நூல்தளம் மூலம் சில பள்ளிகளுக்கும் தனியார் அமைப்புகளுக்கு நூலகம் அமைத்து கொடுத்தேன். இரண்டாம் வருடம் இந்தியாவின் பல்வேறு பதிப்பகங்களுளிலிருந்து தேர்ந்தெடுத்து புத்தகங்கள் வாங்கி தமிழ்நாட்டின் கிட்டதட்ட அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் டெல்லி , பெங்களூர், & சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மன் போன்ற நாடுகளிலிருந்து புத்தக orderகள் வரப் பெற்றன. ததமிழகத்தில் ஒரு சிறார் சிலர் நூலகங்கள் அமைத்து தரவும் கேட்டுக் கொண்டனர். வாரத்தில் இரண்டு நாட்கள் கொரியர் அனுப்புவது, இரண்டு நாட்கள் Purchase Parcel எடுத்து வருவது, இரண்டு நாட்கள் புத்தகம் கேட்பவர்களின் Customized ஆகச் புத்தகங்கள் தேர்ந்தெடுத்து Bill போட்டு Pack செய்வது என வேலைகளை பிரித்துக் கொண்டேன். இந்த வேலையில் எனக்கு பெரிதும் ஓர் Assistant போல உதவியது மகிழ்தான். பார்சல் ஒன்று வந்துவிட்டால் பிரித்து புத்தகங்களை வரிசைப்படுத்தி அடுக்கி வைத்து Billலோடு நிற்பாள். Check செய்து சரியாயிருக்கு எனச் சொன்ன பின் அலமாரியில் அடுக்குவது அவளேதான். தொடர்ந்து வாங்கும் புத்தகங்களின் தலைப்பு எல்லாமே அவளுக்கு அத்துப்படி. அடுத்து Courier அனுப்ப Bill போடும் பொழுது ஒவ்வொன்றாய் தலைப்பும் விலையும் சொல்லி பெட்டியில் அடுக்குவதும் அவள்தான். Tape ஒட்டும்போது மட்டும் அப்பாவுடனோ அண்ணணுடனோ சண்டை வந்து விடும் " என்னை ஒட்ட விட மாட்டறாங்க" என. இப்படியாக நூல்தளம் நன்றாக அடுத்தடுத்த படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறது. புத்தகங்கள் தேவையெனின் noolthalam@gmail.com க்கு மெயில் போடலாம். இல்லையெனில் இங்கே உங்கள் வாழ்த்தையும் தெரிவிக்கலாம். நன்றி. ( நூல்தளம் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தியா பள்ளி தாளாளர் Vidhya chendhil, Sagar பள்ளி முதல்வர் Radha Manokaran , வேளாளர் கல்லூரி நூலகத் துறை தலைவர் Stephen, மற்றும் தேசிய விருது பெற்ற பிண்ணணி பாடகர் சுந்தரையர் வந்திருந்து வாழ்த்தினர். ) சி.வனிதாமணிஅருள்வேல் கதைக்களம் & நூல்தளம் ஈரோடு
留言