#தாய்மொழி தின கொண்டாட்டம் மிகச் சவாலாய் இருக்குமென அச்சத்தோடே இப்பள்ளிக்குள் நுழைகிறேன்....ஏனெனில் வழக்கமாய் பள்ளிகளில் கதை என்பது எப்போதுதாவது நிகழும், அதனால் நம்மால் குழந்தைகள் மனதை ஈர்க்கும் விதமாய் கதை சொல்லிவிட முடியும் என்ற ஒற்றை நம்பிக்கை எனை உந்தித் தள்ளும், ஆனால் இந்த பள்ளி அனுதினமும் ஒவ்வொரு பாடவேளையும் சொல்லப்போனால் ஒவ்வொரு பாடமுமே கதைகளாகத்தான் சொல்லப்படுகிறது. இப்படியாக கதைகளைக் கேட்டே வளரும் இக்குழந்தைகளை சந்தித்து கதை சொல்ல தாய்மொழித் தின கொண்டாட்டத்திற்காக அழைக்கப்பட்டேன். ஆனால் அச்சின்னஞ்சிறு குழந்தைகள் என் அச்சத்தைப் போக்கி ஆசுவாசப்படுத்தினார்கள். 250 க்கும் மேற்பட்ட 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் படிப்பதால், இரண்டு குழுவாய் பிரித்து கதைகளைச் சொன்னேன்.மழலைகள் தங்கள் மகிழ்ச்சியை மனம் மலர்வதை தாங்கள் கொண்டாட்டத்தில் இருப்பதை உடல்மொழியில் மிக உற்சாகமாய் வெளிப்படுத்தினார்கள். கதை கொண்டாட்டங்கள் முடிந்து பரிசு பெட்டகமொன்றை பள்ளி தாளாளர், என் அன்பிற்கும் மரியாதைக்கும் என்றுமே உரிய திருமதி.காயத்ரி அவர்கள் எனக்களித்தார்கள், உடனே சூழ்ந்திருந்த இப்பிஞ்சுகள் எனை பரிசைப் பிரித்துப் பார்க்க கட்டளையிட்டனர்.பிரித்தெடுத்துப் பார்த்தால் ஆச்சரியத்தில் அசந்து போனேன் அத்தனையும் இந்த சின்னஞ்சிறு கைகளால் செய்யப்பட்ட கைவேலைப்பாடுகள். ஒவ்வொரு பரிசுப் பொருளாய் எடுக்கையில் நான் செய்தது, நான் உதவியது என குழந்தைகள் ஆர்ப்பரித்தனர். தலையில் போட்டுக்கொள்ளும் அழகான ஹேர்பேண்ட் ஒன்றைப் பரிசளித்திருந்தார்கள், நானும் மகிழ்ச்சியில் அணிந்து கொண்டேன்..உடனே குழந்தைகள், வனி அத்தை உங்களுக்கல்ல இது மகிழுக்குத்தான் செய்தோம் என சொன்னதும் ஓர் அசட்டுச் சிரிப்போடு கழட்டி வைத்துவிட்டேன். அத்துனை அன்பும் மகிழ்ச்சியுமாய் கொண்டாட்டங்கள் ஓய்ந்தன. (மகிழ் இதே பள்ளியில்தான் படிக்கிறாள்.நிகழ்வின் போதோ நிகழ்வு முடிந்து வகுப்புக்கு திரும்பும் போதோ கூட தன் அம்மா என்று எந்த இடத்திலும் காட்டிக் கொள்ளவில்லை....YOU ARE A STORYTELLER, tats it என்பது போல் நடந்து கொண்டாள். நான் இப்பண்பைக் கற்றுக் கொண்டு இன்னும் கொஞ்சம் எனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.) நான் சட்டென்று சிறு பிள்ளையாய் மாறிவிட்டால் வேல்ஸ் அகாடமியில் படிக்க ஆசைப்படுவேன். Really Gayathri ka....luv u and ur school so so much.... சி.#வனிதாமணிஅருள்வேல் #கதைக்களம் - ஈரோடு
Comments